3 ஆடுகள் விஷம் வைத்து சாகடிப்பு


3 ஆடுகள் விஷம் வைத்து சாகடிப்பு
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே 3 ஆடுகள் விஷம் வைத்து சாகடிப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள கோமானேரி ஓடக்கரை தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சின்னத்துரை (வயது 35). இவரும், அவரது மனைவி சுடலைவடிவுவும் 12 ஆடுகளை வளர்த்து வருகின்றனர். கடந்த 5-ந்தேதி ஆடுகளை அங்குள்ள காட்டுப் பகுதியில் மேய விட்டுவிட்டு, மாலையில் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். மறுநாள் இதில் 3 ஆடுகள் திடீரென இறந்தன. அதனை பரிசோதித்து பார்த்ததில் அவை விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சின்னத்துரை அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story