கிணற்றில் விழுந்த 3 ஆடுகள் உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த 3 ஆடுகள் உயிருடன் மீட்பு
x

கிணற்றில் விழுந்த 3 ஆடுகள் உயிருடன் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் பாக்கினிசா. இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் 3 ஆடுகள் தவறி விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 ஆடுகளையும் பத்திரமாக மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Next Story