ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 சிலைகள் நெல்லை அருங்காட்சியகத்திற்கு ஒப்படைப்பு

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட 3 சிலைகள் நெல்லை அருங்காட்சியகத்திற்கு ஒப்படைப்பு
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:17:35+05:30)

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட நந்தி உள்ளிட்ட 3 பழங்கால சிலைகளை நெல்லை அருங்காட்சியகத்திற்கு கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஒப்படைத்தார்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட நந்தி உள்ளிட்ட 3 பழங்கால சிலைகளை நெல்லை அருங்காட்சியகத்திற்கு கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று ஒப்படைத்தார்.

தாமிரபரணி ஆற்றில்...

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி மற்றும் முறப்பநாடு பகுதிகளில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கடந்த ஆண்டு வெவ்வேறு பகுதிகளில் மூன்று சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இதில் முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் கண்டு எடுக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் சேவகியின் இரண்டு கல்சிலைகளும், முறப்பநாடு பகுதியில் கண்டைடுக்கப்பட்ட வெண்கலச்சிலையும் இதில் அடங்கும்.

அந்த சிலைகள் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளை மக்கள் பார்வைக்கு வைக்க மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஏற்பாடு செய்தார்.

அருங்காட்சியகத்திற்கு ஒப்படைப்பு

அதன்படி, இந்த சிலைகளை நெல்லை அரசு அருங்காட்சியகத்திற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று ஸ்ரீவைகுண்டம் விருந்தினர் மாளிகையில் நடந்தது.

இந்த மூன்று சிலைகளையும், அதற்கான ஆவணங்களையும் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளியிடம் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கவுரவ்குமார், தாசில்தார் ராதாகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story