போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
x

பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக திருச்சியில் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டன.

திருச்சி

பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக திருச்சியில் 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டன.

விபசாரம்

திருச்சி கண்டோன்மெண்ட் கலெக்டர் அலுவலக சாலை பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விபசார தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

சோதனையில் அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அந்த மசாஜ் சென்டரின் மேலாளர் விவேக் கைது செய்யப்பட்டதுடன், அங்கிருந்த 3 பெண்களும் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் ஏற்கனவே அந்த மசாஜ் சென்டர் மீது அங்கு விபசாரம் நடைபெறுவதாக புகார் எழுந்து இருந்தது.

பணியிட மாற்றம்

இந்த நிலையில் பாலியல் தொழிலை தடுக்க விபசார தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசரஸ்வதி, ராஜ்மோகன் மற்றும் போலீஸ் வாகன டிரைவர் அத்தாலி உள்ளிட்ட 3 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story