பந்தலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
பந்தலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே கொளப்பள்ளியிலிருந்து ஆட்டோ ஒன்று நெல்லியாளம் டேன்டி வழியாக பாட்டவயல் சென்று கொண்டிருந்தது. பாலவயல் பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த ஜீப்மீது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மோதியது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவின் பயணம் செய்த கொளப்பள்ளி பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 70), செல்வராணி (75), லெனின் (12) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story