கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து 3பேர் காயம்


கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து 3பேர் காயம்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து 3பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே கிழவிபட்டியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ரமாதேவி (வயது 35), முத்துராஜ்குமார் மனைவி வள்ளியம்மாள் ( 39), கெச்சிலாபுரத்தை சேர்ந்த மந்திரம்(50) ஆகிய 3பேரும் ஈராச்சி கிராமத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலையில் வேலை முடித்து ஆட்டோவில் 3 பேரும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோ கரிசல்குளம் பகுதியில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 3 பேரும் காயமடைந்தனர். 3 பேரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ேசர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story