மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயம்
x

விளாத்திகுளம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில்3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள கே. சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த பூலோக சந்திரன் மகன் செண்பகதிருமால் (வயது 35). அதே ஊரை சேர்ந்த சந்திரன்(33). இவர்கள் 2 பேரும் சுப்புலாபுரம் கிராமத்தில் இருந்து விளாத்திகுளம் நோக்கி மோட்டார் ைசக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் அன்னபூவநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜெய்கணேஷ்(37) விளாத்திகுளத்தில் இருந்து அன்னபூவநாயக்கன்பட்டிக்கு எதிரே வந்து கொண்டிருந்தார். ராமச்சந்திராபுரம் விலக்கு அருகே 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் காயம் 3 பேரையும் மீட்டு 108 வாகனம் மூலம் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக 3 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story