வீடு புகுந்து 3 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.90 ஆயிரம் திருட்டு
வீடு புகுந்து 3 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.90 ஆயிரம் திருடுபோனது.
மதுரை
மதுரை தெற்கு வாசல் சின்னக்கடை தெரு கொண்டைய நாயுடு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 75). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் கதவை பூட்டாமல் சாத்திவிட்டு உள்ளே தூங்க சென்று விட்டார். அதிகாலையில் எழுந்து பார்த்த போது கதவு திறக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோவும் திறக்கப்பட்டு அதில் இருந்த 3 கிலோ வெள்ளி பொருட்கள், 3 செல்போன்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து அவர் தெற்குவாசல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story