நாகர்கோவிலுக்கு ரெயிலில் கடத்தி வந்த 3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
நாகர்கோவிலுக்கு ரெயிலில் கடத்தி வந்த 3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலுக்கு ரெயிலில் கடத்தி வந்த 3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் புனேயில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது, ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் ஒரு பை கிடந்தது. அந்த பையை போலீசார் சோதனை செய்தனர். ேசாதனையில், தடை செய்யப்பட்ட 3 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை யாரோ மர்ம நபர்கள் வெளி மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கடத்தி வந்தது தெரியவந்தது. ஆனால் மர்ம நபர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து 3 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குக்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.