ஆசிரியை வீட்டில் 3 கிலோ வெள்ளி-ரூ.15ஆயிரம் திருட்டு


ஆசிரியை வீட்டில் 3 கிலோ வெள்ளி-ரூ.15ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 26 Jun 2023 1:17 AM IST (Updated: 26 Jun 2023 4:40 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியை வீட்டில் 3 கிலோ வெள்ளி-ரூ.15ஆயிரம் திருட்டு

தஞ்சாவூர்

கபிஸ்தலத்தில் ஆசிரியை வீட்டில் 3 கிலோ வெள்ளி மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகி்ன்றனர்.

ஆசிரியை

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் குயவர் தெருவில் வசிப்பவர் மூர்த்தி. வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அகிலா(வயது45). இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு மகள் சென்னையில் படித்து வருகிறார்். தற்போது அகிலா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

3 கிலோ வெள்ளி-ரூ.15 ஆயிரம்

நேற்றுமுன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு அகிலா தனது உறவினர் வீடான அரியலூருக்கு சென்றுவிட்டார். அப்போது மர்மநபர்கள் வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் அங்கு பீரோவில் இருந்த 3கிலோ 250 கிராம் வெள்ளி, ½ பவுன் நகை, ரூ.15 ஆயிரம், 900 அமெரிக்க டாலர்கள் உள்பட ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர். மேலும் வீட்டில் இருந்த எல். இ. டி. டி.வி. மற்றும் கண்காணிப்பு கேமராவில் இருந்த ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் திருடி சென்றுவிட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

மறுநாள் காலை வீட்டிற்கு வந்த அகிலா வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் அகிலா புகார் செய்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி ேதடிவருகின்றனர். மேலும் தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.


Next Story