3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் கடந்த மே மாதம் 31-ந் தேதி அதிகாலை நேரத்தில் வங்கியின் ஜன்னல்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து, பீரோக்கள் சிதறி கிடந்தது. பெட்டக அறை சேதமாகவில்லை. எந்த பொருளும் கொள்ளை போகவில்லை. இதை வங்கி காவலர் பார்த்து வங்கி செயலாளரிடம் தெரிவிக்க அவர் கொடுத்த புகாரின் பேரில் குண்டடம் போலீசார் கொள்ளை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மஞ்சுநாத் (வயது 30), தேவராஜா (32), அசோக் (31), திம்மேஷ் (62) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். செல்போன் சிக்னல் மூலமாக துப்பு துலக்கி இவர்களை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட திம்மேஷ், அசோக், தேவராஜா ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், கலெக்டர் வினீத்துக்கு பரிந்துரைத்தார். கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து, கோவை சிறையில் உள்ள 3 பேரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் ஆனந்த் நேற்று வழங்கினார்.


Next Story