பக்தரிடம் தங்க சங்கிலிைய திருட முயன்ற 3 பெண்கள் கைது


பக்தரிடம் தங்க சங்கிலிைய திருட முயன்ற 3 பெண்கள் கைது
x
திருப்பூர்


காங்கயம் அருகே கோவில் திருவிழாவில் பக்தரிடம் தங்க சங்கிலியை திருட முயற்சி செய்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சங்கிலி பறிக்க முயற்சி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 25). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காங்கயம் அருகே மடவிளாபக்தரிடம் தங்க சங்கிலிைய

திருட முயன்ற 3 பெண்கள் கைதுபக்தரிடம் தங்க சங்கிலிைய

திருட முயன்ற 3 பெண்கள் கைதுகம் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்தார்.

அப்போது கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை யாரோ ஒரு பெண் திருட முயற்சி செய்துள்ளார். இதை அறிந்து சுதாரித்துக்கொண்ட பிரவீன்குமார் உஷாராகிய பின், கூட்டத்தில் நின்றிருந்த சந்தேகப்படும் படியான 3 பெண்கள் குறித்து காங்கயம் போலீசாரிடம் புகார் செய்தார்.

3 பெண்கள் கைது

இதைத்தொடர்ந்து காங்கயம் போலீசார் உடனடியாக பக்தர்கள் கூட்டத்திற்குள் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த 3 பெண்களும் நாகர்கோவில் ஒழுகுனசேரி பகுதியை சேர்ந்த சுப்புதாய் (30), அட்சயா (28), மரியா (33) என்பதும், இவர்கள் 3 பேரும் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வந்து பக்தர் போல் நின்று கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அந்த 3 பெண்களையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனர்.


Next Story