ரூ.3 லட்சம் மக்காச்சோள பயிர்கள் தீயில் கருகி சேதம்


ரூ.3 லட்சம் மக்காச்சோள பயிர்கள் தீயில் கருகி சேதம்
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே ரூ.3 லட்சம் மக்காச்சோள பயிர்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே சிவஞானபுரம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். தற்போது பயிர்கள் அறுவடைக்கு தயார்நிலையில் இருக்கின்றன. இந்த நிலையில் நேற்று ஜெயக்குமார் என்பவரின் தோட்டத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் மக்காச்சோள அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோள பயிர்கள்தீப்பிடித்து எரிந்தன. சிறிது நேரத்தில் தீ அருகிலுள்ள பிரசாந்த் என்ற விவசாயிதோட்டத்தில் பயிரிட்டிருந்த மக்காச்சோள பயிர்களிலும்தீ பரவி எரிந்தது. தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் வந்து பல மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீவிபத்தில் அந்த 2 விவசாயிகளின் நிலத்திலும் விளைச்சல் ஆகி இருந்த தலா ரூ.1½ லட்சம் மதிப்பிலான மக்காச்சோள பயிர்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இதுகுறித்து அந்த 2 விவசாயிகளும் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story