ஓட்டலில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்; அண்ணன்-தம்பி கைது
வேடசந்தூர் அருகே ஓட்டலில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்
வேடசந்தூர் அருகே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் நாகம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புற அறையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அஸ்ராகார்க்குக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் இன்று அங்கு சோதனை செய்தனர். அப்போது ஓட்டலின் பின்புறம் உள்ள அறையில் 100 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதுதொடர்பாக வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் வழக்குப்பதிவு செய்து, குட்காவை பதுக்கி வைத்திருந்த வேடசந்தூரை சேர்ந்த நசுருதீன் (வயது 25), அவரது தம்பி நிஜாமுதீன் (23) ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story