தேசிய நீச்சல் போட்டிக்கு மதுரை மாற்றுத்திறனாளி வீரர்கள் 3 பேர் தேர்வு


தேசிய நீச்சல் போட்டிக்கு மதுரை மாற்றுத்திறனாளி வீரர்கள் 3 பேர் தேர்வு
x

தேசிய நீச்சல் போட்டிக்கு மதுரை மாற்றுத்திறனாளி வீரர்கள் 3 பேர் தேர்வு

மதுரை


தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் சார்பாக சீனியர் தேசிய நீச்சல் போட்டிக்கான தேர்வு சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் நடந்தது. இந்த போட்டியில் மதுரையை சேர்ந்த நீச்சல் வீரர் மணிகண்டன் 100 மீட்டர் ப்ரிஸ்டையில், பேக் ஸ்டோக்கில் தங்கமும், 50 மீட்டர் ப்ரிஸ்டையில் வெள்ளி என மூன்று பதக்கங்களை வென்றார். பிரகாஷ் 50 மீட்டர் பிரஸ் ஸ்டோக் தங்கம், 50 மீட்டர் பேக் ஸ்டோக் வெள்ளி, 50 மீட்டர் ப்ரிஸ்டையில் வெள்ளி என மூன்று பதக்கங்ளை பெற்றார். நவநீதகிருஷ்ணன் 100 மீட்டர் ப்ரி ஸ்டையில் தங்கம், 50 மீட்டர் பேக் ஸ்டோக்கில், பிரஸ் ஸ்டோக்கில் வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்றார். இதன் மூலம் இவர்கள் 3 பேரும் தேசிய நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றனர். அதன் மூலம் இவர்கள் வருகிற 13-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் தேசிய நீச்சல் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். வெற்றி பெற்ற மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை மண்டல முதுநிலை மேலாளர் பியூலாஜானி சுசிலா, மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன், மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினார்கள்.


Next Story