ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்


ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்
x

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

சாத்தூர் தாலுகாவில் உள்ள பெரியகொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சம்சுக்கனி (வயது 34). இவர் தனது நண்பர் பாலாவின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு மனைவி நசுருதீன் பானு, மகள் ஆதிகாபாத்திமா ஆகியோருடன் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்திற்கு சென்றார். கோவில்பட்டி-சாத்தூர் ரோட்டில் உள்ள புல்வாய்பட்டி விலக்கு அருகே சென்ற போது பின்னால் வந்த கார், சம்சுக்கனி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்சுக்கனி, அவரது மனைவி நசுருதீன்பானு, மகள் ஆதிகாபாத்திமா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சம்சுக்கனி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த கஞ்சம்பட்டி தெற்குதெருவில் வசித்து வரும் முருகன் மகன் முத்துராமலிங்கம் (28) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story