செல்போன் திருடிய 3 பேர் கைது
செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதிகளில் செல்போன் திருட்டு நடப்பதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் வேளாங்கண்ணி பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த 3 பேரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சூலூர் காரணம்பேட்டையை சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் தினேஷ் (வயது 25), மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதுப்பட்டினம் செல்லாத்தம்மன் நகரை சேர்ந்த வீராசாமி மகன் ரவிச்சந்திரன் (38), ராமச்சந்திரன் மகன் அருளழகன் (28) ஆகியோர் என்பதும், இவர்கள் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் வழிப்பறி மற்றும் செல்போன் திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 31 கிராம் தங்க சங்கிலிகள், 4 செல்போன், 1 ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.