சாராயம் விற்றதாக 2 பெண்கள் உள்பட 3 போ் கைது


சாராயம் விற்றதாக 2 பெண்கள் உள்பட 3 போ் கைது
x
தினத்தந்தி 29 March 2023 6:45 PM GMT (Updated: 29 March 2023 6:46 PM GMT)

மணல்மேடு அருகே சாராயம் விற்றதாக 2 பெண்கள் உள்பட 3 போ் கைது

மயிலாடுதுறை

மணல்மேடு, மார்ச்.30-

மணல்மேடு போலீசார் மன்னிப்பள்ளம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மன்னிப்பள்ளம் மெயின்ரோடு பகுதியில் சாராயம் விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தம்பிதுரை மனைவி பழனியம்மாள் (வயது53) என்பவரைக் கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சேத்தூர் ரைஸ்மில் பகுதிக்குச் சென்ற போலீசார் அங்கே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சதாசிவம் மனைவி லதா (52) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றினர். தொடர்ந்து திருவாளப்புத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த செல்வராஜ் மகன் சக்திவேலை (25) கைதுசெய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றினர்.


Next Story