பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மேலும் 3 பேர் கைது
வீரவநல்லூரில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பல்கில் கடந்த 1-ந்தேதி 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் பெட்ரோல் போட வந்தனர். அவர்கள் பங்க் ஊழியரான மணிகண்டன் (வயது 34) என்பவரிடம் விரைவாக தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட சொல்லி அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் அவர்கள் சேரன்மாதேவி விவேகானந்த தெருவைச் சேர்ந்த பெருமாள் என்ற சுப்பிரமணியன் என்ற பாட்ஷா பெருமாள் (வயது 19), மற்றும் ஒரு இளஞ்சிறுவர் ஆகிய 2 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சேரன்மாதேவியை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற பண்ணை அய்யப்பன் (19), பத்தமடையை சேர்ந்த பிச்சையா என்ற உள்ளி பிச்சையா (28) மற்றும் சரவணன் (22) ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.