பழமையான 3 ஆலமரங்கள் வேரோடு சாய்ந்தது


பழமையான 3 ஆலமரங்கள் வேரோடு சாய்ந்தது
x

பலத்த சூறை காற்று வீசியதால் பழமையான 3 ஆலமரங்கள் வேரோடு சாய்ந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த சாத்தனூர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான 3 ஆல மரங்கள் உள்ளன.

இந்த ஆலமரத்தின் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதால் 3 ஆல மரங்கள் வேரோடு சாய்ந்தது.

இதனால் அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை கட்டிடம் மற்றும் ஒரு மின் கம்பம் சேதமானது.

மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குழாய் உடைந்ததால் கிராமத்திற்கு குடிநீர் செல்வது தடைபட்டது. இதனால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வேரோடு சாய்ந்த ஆல மரங்களை அப்புறப்படுத்தி குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story