அதிக பாரம் ஏற்றிய 3 லாரிகள் பறிமுதல்
அதிக பாரம் ஏற்றிய 3 லாரிகள் பறிமுதல்
கன்னியாகுமரி
களியக்காவிளை:
குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் அதிக பாரத்தில் பெரிய பாறைகற்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க கோரியும், சட்ட விரோதமாக பாறைகள் உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் களியக்காவிளையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிக பாரத்துடன் கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்த முயன்ற 3 லாரிகளை பறிமுதல் செய்தனர். இந்த கனிம வளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. லாரிகளின் உரிமையாளர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story