மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
x

ஓசூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது22). இவர் ஓசூர் சிப்காட் அருகே பேடரப்பள்ளி காமராஜ் நகரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர், தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து பார்த்திபன் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மோட்டார்சைக்கிளை திருப்பத்தூர் மாவட்டம் புதூரை சேர்ந்த நரேஷ்குமார் (22), ஆந்திர மாநிலம் குப்பம் அருகே உள்ள பொங்கன்கூரை சேர்ந்த ஹரிகரன் (24), ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளியை சேர்ந்த விக்னேஷ் (19) ஆகியோர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story