தம்பதியை தாக்கிய 3 பேர் கைது
சாத்தான்குளம் அருகே தம்பதியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் கிருஷ்ணர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 40). இவர்களுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சிவபெருமாளுக்கும் இடையே நடைபாதை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
சம்பவத்தன்று பிரச்சினைக்குரிய இடத்தில் சிவபெருமாள் இரும்பு கேட் அமைத்தார். அதனை சுடலைமுத்து அகற்றியதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவபெருமாள் உள்ளிட்டவர்கள் சுடலைமுத்து, அவருடைய மனைவி மாரியம்மாள் ஆகியோரை கல்லால் தாக்கினர். இதில் காயமடைந்த தம்பதி சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிவபெருமாள், அவருடைய மனைவி இசக்கியம்மாள், தந்தை பெரியசாமி, தாயார் நாச்சியார், சகோதரர்கள் ஆறுமுகநயினார், இசக்கிமுத்து, ஆறுமுகநயினார் மனைவி மாரியம்மாள் ஆகிய 7 பேர் மீது சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார். இதுதொடர்பாக சிவபெருமாள், ஆறுமுகநயினார், இசக்கிமுத்து ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
---