கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது


கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
x

திருவண்ணாமலையில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை திருக்கோவிலூர் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள முட்புதரில் சந்தேகப்படும் வகையில் 5 பேர் இருப்பதை கண்டு போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் 3 பேர் சிக்கினர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில், குஜராத்தை சேர்ந்த சித்ரசின், பீகாரை சேர்ந்த முக்கேஷ்குமார், முகேஷ் என்பதும், 5 பேரும் இணைந்து கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story