காட்டு கோழியை வேட்டையாடிய 3 பேர் கைது


காட்டு கோழியை வேட்டையாடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2023 2:15 AM IST (Updated: 28 Aug 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டு கோழியை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல்

பெரும்பாறை அருகே பண்ணைக்காடு, பெரும்பள்ளம், தாண்டிக்குடி பகுதிகளில் வனச்சரகர் கிருஷ்ணகுமார் தலைமையில் வனவர் ராஜேஷ் கண்ணன், வனக்காப்பாளர்கள் சரவணன், மணிகண்டன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தாண்டிக்குடி செல்லும் பகுதியில் சுற்றிதிரிந்த சிலர் வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓடினர். இதில் 2 பேர் மட்டும் சிக்கினர்.

இதையடுத்து அந்த வழியாக வந்த ஜீப்பை மறித்து சோதனை செய்தனர். அதில் ஜீப்பில் நாட்டு துப்பாக்கி, காட்டு கோழி உடல், 4 கத்திகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பண்ணைக்காடு ஊரல்பட்டியை சேர்ந்த சந்திரன் (வயது 44), பண்ணைக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணி (43) என்பதும், காட்டு கோழியை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பி ஓடியதில் கருணாகரன் (40) என்பவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.


Next Story