கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது


கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது
x

கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை தாலுகா நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது33), வேல்முருகன் (37), அஜய் (22) ஆகியோருக்கும் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடுவக்குறிச்சி இந்திரா நகர் அருகே சுந்தர் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அந்த 3 பேரும் சுந்தரை அவதூறாக பேசி, ஆயுதத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுந்தர் நெல்லை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவித்திரி விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தார்.


Next Story