கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
x

நாங்குநேரியில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி போலீசார் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அதில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story