வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த 3 பேர் கைது


வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த 3 பேர் கைது
x

வாணியம்பாடியில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டை பகுதியை சேர்ந்த நவநீதம் (வயது 48) மற்றும் உதயேந்திரம் பகுதியை சேர்ந்த தாமஸ் (55) ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து, பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழில் ஈடுபடுத்தி வருவதாக புகார் எழுந்தது. அதன் காரணமாக, அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோட்டை பகுதியில் நவநீதம் என்பவர் வீட்டில் வெளி நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தால் திடீரென போலீசார் வீட்டிற்குள் புகுந்து சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் தாமஸ் என்பவர் இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் இதற்கு வாடிக்கையாளர்களை அழைத்து வர ஆட்டோ டிரைவர் ஒருவரை புரோக்கராக வைத்து செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவர் மற்றும் தாமஸ், அவரது மனைவி திலகவதி (35) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், போலீஸ் வருவதை கண்டு தப்பி ஓடி தலைமறைவான நவநீதம் என்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story