மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
x
சேலம்

சூரமங்கலம்:-

சேலம் நங்கவள்ளி சின்னசோரகையை சேர்ந்தவர் மணி (வயது 23). இவர், ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். அவரது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதனை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்த ரசீத் (வயது 19), சேலம் குமாரசாமிப்பட்டி ராம்நகர் ஓடையை சேர்ந்த சுரேஷ்குமார் (20), வினோத்குமார் (26) ஆகிய 3 பேர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. உடனே போலீசார் 3 பேரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story