இரும்பு குழாய்கள் திருடிய 3 பேர் கைது


இரும்பு குழாய்கள் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 8 Aug 2023 1:30 AM IST (Updated: 8 Aug 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

தோட்டத்தில் இரும்பு குழாய்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 52). இவருடைய தோட்டம் போடியில், மங்கம்மாள் சாலையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் இருந்து இரும்பு குழாய்கள் திருடு போயின. இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் சண்முகவேல் புகார் அளித்தார். அதன்பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே ஊரை சேர்ந்த பூபதி (வயது 25), லோகேஷ் (22), போடியை சேர்ந்த பாண்டிமுருகன் (23) ஆகிய 3 பேரும் சண்முகவேலின் தோட்டத்தில் இருந்து இரும்பு குழாய்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story