போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி 3 பேர் கைது


போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி 3 பேர் கைது
x

போலி ஆவணம் தயாரித்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆவடி,

சென்னையை அடுத்த திருவேற்காடு அர்ஜுனமேடு ராமதாஸ் சாலையில் வசிப்பவர் ராஜப்பன் (வயது 64). இவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

திருவேற்காடு கிராமத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள எனக்கு சொந்தமான இடத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து ஆக்கிரமிக்க முயன்றனர். இதுபற்றி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி பூந்தமல்லி தாசில்தார் முன்னிலையில் நிலத்தை அளவீடு செய்தபோது அந்த நிலம் எனக்கு சொந்தமானது என சான்றுஅளித்தனர். இதனால் ராகேஷ் உள்ளிட்டவர்கள் என்னிடம் தகராறில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

3 பேர் கைது

இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி கூடுதல் துணை கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நில தகராறு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருந்த திருவேற்காடு பகுதியை சேர்ந்த ராகேஷ் (வயது 23), அருணகிரி (58), நாராயணன் (64) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story