டீசல் திருட முயன்ற 3 பேர் கைது


டீசல் திருட முயன்ற 3 பேர் கைது
x

டீசல் திருட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

வையம்பட்டியை அடுத்த இளங்காகுறிச்சி பகுதியில் சரக்கு வேனில் வந்து வாகனங்களில் டீசல் திருட முயன்ற 3 பேரை பொதுமக்கள் பிடித்து வையம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சீட்டுகுருவிநாயக்கன்பட்டியை சேர்ந்த சதிஷ் குமார் (வயது 22), கல்லுப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (22), சோலையம்மாபட்டியை சேர்ந்த சக்திவேல் (26) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சரக்கு வேன் மற்றும் கேன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story