வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது


வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது
x

வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி உத்தமர்சீலி அருகே உள்ள கிளிக்கூடு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் பிரகாஷ் (வயது 23). அதே பகுதியை சேர்ந்த நல்லேந்திரனின் மகன் அறிவழகன் (30). இவர்கள் உறவினர்கள் ஆவார்கள். மேலும் 2 பேரின் குடும்பத்தினருக்கும் இடையே அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் மரியாதை செய்வது தொடர்பாக இருந்து வந்த முன்விரோதத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பிரகாஷ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அறிவழகனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் பிரகாஷ், ஆனந்த், மதியழகன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு அறிவழகனின் பெரியப்பா மகனான அசோக் (35), அவரது நண்பர்கள் குழுமணி அருகே உள்ள பேரூர் அக்ரஹாரத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் ஆட்டோ சக்தி என்கிற சக்திவேல் ( 35), பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த சங்கர் மகன் கார்த்திக் ஆகிய 3 பேர் பிரகாஷை வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகினர். இந்த சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் திருச்சி காவிரி பாலம் அருகே பதுங்கியிருந்த அசோக், சக்திவேல் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேரை கொள்ளிடம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.


Next Story