வேன் டிரைவர் கொலையில் 3 பேர் கைது-காதல் விவகாரத்தில் குடும்பத்தினர் வெறிச்செயல்

வேன் டிரைவர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். காதல் விவகாரத்தில் பெண் குடும்பத்தினர் இந்த வெறிச்ெசயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
வேன் டிரைவர் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். காதல் விவகாரத்தில் பெண் குடும்பத்தினர் இந்த வெறிச்ெசயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
வெட்டிக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் காந்தி ராஜா (வயது 28). இவர் மதுரை வில்லாபுரம் தென்றல் நகரில் தங்கி, வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு, தெற்குவாசல் ரெயில்வே பால பகுதியில் காந்திராஜா மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தெற்கு வாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், காந்திராஜா காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
3 பேர் கைது
இதுகுறித்து போலீசார் கூறுகையில், காந்திராஜாவும், தெற்குவாசல் பகுதியை சேர்ந்த மாயழகு என்பவரின் மகளும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு மாயழகுவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருந்த போதிலும் காந்திராஜா, தன்னுடைய காதலை கைவிட மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாயழகு மற்றும் அவருடைய மகன்கள் காந்திராஜாவை வெட்டி கொலை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மாயழகு உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்துள்ளோம் என்றனர்.