கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்.
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ரோச் பூங்கா அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த தொம்மை மகன் வெலிங்டன் (வயது 33), தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டை சேர்ந்த பிச்சையா மகன் ஸ்டாலின் (23), தூத்துக்குடி வாடி தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் உதயமூர்த்தி (23) என்பது தெரியவந்தது. அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 750 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள், ரூ.19 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட வெலிங்டன் மீது ஏற்கனவே 8 வழக்குகளும், ஸ்டாலின் மீது 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.