பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை


பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவங்களில் பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பட்டதாரி

திருச்சி-புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு பகுதியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மகள் கிளின்ரிகா (வயது 22). இவர் பி.பி.ஏ. பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் எலிமருந்து (விஷம்) தின்று திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து அவரது தாய் எலிஸ்டேனா கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரசிங்கம் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

மணப்பாறை

இதேபோல் மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் அ ருகே மான்பூண்டி ஆற்றங்கரை ஓரத்தில் முட்புதரில் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த மக்கள் உடனே மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர் புதுக்கோட்டை மாவட்டம், கீழகோத்திராபட்டியை சேர்ந்த ரவி பாஸ்கர் (44) என்றும், பட்டபடிப்பு படித்த இவர் விவசாயம் செய்து வந்தது தெரியவந்தது. மேலும் அவர் அருகே விஷபாட்டில் கிடந்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை கேட்டதால் தற்கொலை

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை நாகம்மை வீதியை சேர்ந்தவர் ஆல்வின் ஜெரால்டு. இவரது மனைவி யாழினி விண்ணரசி (28). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் யாழினி விண்ணரசி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விண்ணரசியின் தாய் தேவி பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். அதில், ஆல்வின் ஜெரால்டு வரதட்சணையாக கார் மற்றும் பணம் வேண்டும் எனது மகளிடம் கேட்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான யாழினி விண்ணரசி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நடவடிக்க எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story