3 பேர் போட்டி


3 பேர் போட்டி
x

3 பேர் போட்டி

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் வருகிற 9-ந்தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் 2 பேரும், அ.தி.மு.க. சார்பில் 2 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒருவரும், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஒருவரும் என 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனை 28-ந்தேதி நடைபெற்றது. இதில் அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் தி.மு.க. வேட்பாளர் ஒருவரும், அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவரும், மனிதநேய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒருவரும் வேட்பு மனுவை திரும்ப பெற்றனர். இதையடுத்து மீதமுள்ள 3 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன.


Related Tags :
Next Story