வெவ்வேறு சம்பவத்தில் நேபாள வாலிபர் உள்பட 3 பேர் இறந்தனர்.


வெவ்வேறு சம்பவத்தில் நேபாள வாலிபர் உள்பட 3 பேர் இறந்தனர்.
x

வெவ்வேறு சம்பவத்தில் நேபாள வாலிபர் உள்பட 3 பேர் இறந்தனர்.

திருச்சி

வெவ்வேறு சம்பவத்தில் நேபாள வாலிபர் உள்பட 3 பேர் இறந்தனர்.

நேபாள வாலிபர் சாவு

நேபாளம் நாட்டின் கிழக்கு பகுதி பா்லகி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெபாஷ். இவருடைய மகன் சந்தீப் (வயது 22). இவர்கள் குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் வயிற்றுவலி காரணமாக காரைக்காலில் உள்ள மருத்துவமனையில் சந்தீப் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று அவரை மருத்துவமனையில் இருந்து அவருடைய தந்தை திருச்சிக்கு அழைத்து வந்தார். திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது அவருக்கு வயிற்றுவலி அதிகமாகி மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் குடித்து தற்கொலை

திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்கனி (73). சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். .இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதியவர் சாவு

சேலம் ஓமலூர் சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (78). திருச்சி வந்து இருந்த இவர் அரிஸ்டோ மேம்பால பகுதியில் மயங்கி விழுந்து இறந்தார்.


Next Story