கார் மோதி தம்பதி உள்பட 3 பேர் காயம்


கார் மோதி தம்பதி உள்பட 3 பேர் காயம்
x

கார் மோதி தம்பதி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

கரூர்

கரூர் ஆண்டாங்கோவில் அருகே உள்ள அருள்நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 42). விவசாயியான இவர் குளித்தலை - மணப்பாறை சாலையில் கோட்டமேடு வாய்க்கால் பாலம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவரது மோட்டார் சைக்கிளுக்கு முன்பு மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஒத்தப்பட்டி பகுதியை சேர்ந்த காளிதாஸ் (42) அவரது மனைவி சுதா (35) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் காளிதாஸ், சுதா சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில், விபத்துக்குள்ளான அந்த மோட்டார் சைக்கிள், ஸ்ரீதர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து காயம் அடைந்த ஸ்ரீதர், காளிதாஸ், சுதா ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற காளிதாஸ் மற்றும் சுதா ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஸ்ரீதருக்கு லேசான காயம் என்பதால் அவர் முதலுதவி சிகிச்சை பெற்று சென்றார். இந்த விபத்து குறித்து ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story