ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்ட டாக்டர் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்


ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்ட டாக்டர் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டு ஜெயில்
x

மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்ட டாக்டர் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வேலூர்

மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்ட டாக்டர் உள்பட 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மருத்துவ சீட்

சென்னை மவுலிவாக்கம் ராஜகோபால் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் ஆதவன். இவர் தனது மகளை டாக்டராக்க முடிவு செய்தார். இதை அறிந்து கொண்ட சேலம் இரும்பாலை 2-வது கேட், குறிஞ்சி நகரை சேர்ந்த ஜான் பீட்டர் (வயது 50), காட்பாடி கல்புதூர் காமராஜர் நகரை சேர்ந்த ஜெய்சிங் (51), காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் என்ற சில்வர் ஸ்டார் ஜேம்ஸ் (40),

புதுச்சேரி முதலியார் பேட்டை மாங்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த டாக்டரான இளங்கோ (36) உள்பட 6 பேர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாக கடந்த 2013-ம் ஆண்டு ரூ.35 லட்சம் பெற்றுக் கொண்டனர். ஆனால் அவர்கள் மருத்துவ சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. இதேபோல மேலும் சிலரிடம் இவர்கள் பணம் பெற்றுள்ளனர். மொத்தம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

பணத்தை திருப்பி தராததாலும், மகளுக்கு சீட் வாங்கி கொடுக்காததாலும் ஆதவன் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-2) நடந்து வந்தது.

3 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கின் இறுதி அறிக்கை 2015-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நடைபெற்று வந்த காலக்கட்டத்தில் ஜெய்சிங் மரணம் அடைந்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கு பின் மாஜிஸ்திரேட்டு திருமால் நேற்று தீர்ப்பு கூறினார்.

அதில் ஜான் பீட்டர், ஜேம்ஸ், டாக்டர் இளங்கோ ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை விடுதலை செய்தார்.


Next Story