வாலிபர் உள்பட 3 பேர் கைது


வாலிபர் உள்பட 3 பேர் கைது
x

பாவூர்சத்திரம் அருகே வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

ஆலங்குளம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாப்பேரியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சின்னதுரை (வயது 24). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் அந்த சிறுமி கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி பெற்றோர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து அறிந்த சின்னதுரை தலைமறைவாகிவிட்டார். இவர் தலைமறைவாவதற்கு உடந்தையாக ஆவுடையானூர் ஊராட்சி செயலர் சவுந்தர், ஆட்டோ டிரைவர் சுரேஷ் ஆகியோர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, கோா்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story