வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பேரையூர்,
வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை
பேரையூரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 31). இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்தது. அவருடைய பெற்றோர் இறந்து விட்டதால் தனக்கு யாரும் இல்லை என்று அடிக்கடி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு கார்த்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பேரையூர் அருகே உள்ள பி.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் சண்முகம்(48). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சண்முகம் வீட்டில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பேரையூர் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
சாப்டூரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி ஆனந்தி (40). இவர் வயிற்று வலி நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆனந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீடு சுத்தம் செய்யும் ஆயிலை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாப்டூர் போலீசார் அங்கு சென்று ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.