பஸ்சில் ஏறிய மூதாட்டியிடம் நகை திருடிய பெண் உள்பட 3 பேர் கைது


பஸ்சில் ஏறிய மூதாட்டியிடம் நகை திருடிய பெண் உள்பட 3 பேர் கைது
x

ஆரணியில் பஸ்சில் ஏறிய மூதாட்டியிடம் நகை திருடிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் பஸ்சில் ஏறிய மூதாட்டியிடம் நகை திருடிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நகை திருட்டு

ஆரணியை அடுத்த அரையாளம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா (வயது 72). இவர் நேற்று அவரது மகன் ரவி, மருமகள் கவுரி, உறவினர் மூர்த்தி ஆகியோருடன் முனுகப்பட்டில் உள்ள பச்சையம்மன் கோவிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்புவதற்காக ஆரணி புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார்.

ஆரணி புதிய பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏறிய போது இவரை உரசியபடி ஒரு பெண் உள்பட 3 பேர் பஸ்சில் ஏறி உள்ளனர்.

பஸ்சில் டிக்கெட் எடுப்பதற்காக பார்த்தபோது மணிப்பர்ஸ் திருடப்பட்டிருந்ததை கண்டு சரோஜா கூச்சலிட்டார். அதில் ஒரு பவுன் எடை கொண்ட தங்க நகைகள் இருந்துள்ளன. பதறிய சரோஜா திருடன், திருடன் என கூச்சலிட்டுள்ளார்.

3 பேர் கைது

அப்போது பஸ்சில் இருந்த ஒரு பெண் உள்பட 3 பேர் நைசாக இறங்கி ஓட்டம் பிடித்தனர். அவர்களை சக பயணிகள் பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.

3 பேரையும் ஆரணி நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் சின்ன அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாந்தி (45), சேத்துப்பட்டு பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (52), குமரேசன் (25) என்பது தெரியவந்தது.

அவர்கள் சரோஜாவிடம் இருந்து திருடிய நகைகளை போலீசார் மீட்டு 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story