நாய் கடித்து தொழிலாளி உள்பட 3 பேர் காயம்


நாய் கடித்து தொழிலாளி உள்பட 3 பேர் காயம்
x

கீரனூர் அருகே நாய் கடித்து தொழிலாளி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை

கீரனூர் அருகே ஒடுக்கூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. நேற்று காலை அந்த வழியாக சென்ற தச்சுதொழிலாளி சண்முகம் (வயது 65), பள்ளி மாணவன் ராஜ்மோகன் (11) மற்றும் கன்று குட்டியை வெறிநாய் ஒன்று கடித்தது. இதில் காயம் அடைந்த 2 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் ராஜ்மோகன் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதுவரை அப்பகுதியில் 10-க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் ஒடுக்கூர் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலம்பாயி (50) என்பவரை தெருநாய் கடித்தது. இதில் காலில் பலத்த காயத்துடன் கீரனூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story