பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது


பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் வாகன சோதனையின் போது சிக்கினர்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்த சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் வாகன சோதனையின் போது சிக்கினர்.

5 பவுன் சங்கிலி பறிப்பு

பட்டுக்கோட்டை ஆர்.வி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருடைய மனைவி அஸ்வினி (வயது 30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு தனது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வந்தார்.

பின்னர் அவர் தான் வந்த ஸ்கூட்டரை எடுக்க வந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அஸ்வினி கழுத்தில்அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றனர். இதுகுறித்து அஸ்வினி கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் நேற்று மதியம் பட்டுக்கோட்டை நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் பட்டுக்கோட்டை கைகாட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை

பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

இதில் அவர் பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் சுந்தர்ராஜன் (வயது23) என்பதும், இவர், 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களை வைத்து அஸ்வினியிடம் தங்க சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜன் மற்றும் 2 சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் சுந்தர்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பட்டுக்கோட்டை சிளை சிறையில் அடைத்தனர். சிறுவர்களை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.


Next Story