ரவுடி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


ரவுடி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

ரவுடி உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி

திருச்சியில் கீழதேவதானம் பகுதியில் அகல்விளக்கு வியாபாரி ஒருவர் முன்விரோதம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தவழக்கில் அதே பகுதியை சேர்ந்த ரவுடி அருண்பிரசாத் (வயது 34) கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுபோல், ஸ்ரீரங்கம் ரெயில் நிலைய பகுதியில் சமயபுரம் பூச்சொரிதல் விழாவிற்காக பணம் வசூல் செய்வது தொடர்பான பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் பிரசாந்த் (21), விஜய் (22) ஆகியோர் ஸ்ரீரங்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக ரவுடி அருண்பிரசாத் மீது 24 வழக்குகளும், பிரசாந்த், விஜய் ஆகியோர் மீது தலா 4 வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் கொண்டவர்கள் என்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ்கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார்.


Next Story