கணவன் உள்பட 3 பேர் வன்கொடுமை சட்டத்தில் கைது
கிணற்றில் குத்தித்து பெண் தற்கொலை செய்தவழக்கில் கணவன் உள்பட 3 பேர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த லட்சுமணன் கொட்டாய் பெரிய கவுண்டனூர் பகுதியை சேர்ந்த திருப்பதி மனைவி பானுப்பிரியா (வயது 25). கட்டிட வேலை செய்துவந்தார். திருப்பத்தூரை அடுத்த காக்கணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் துருவன் (27) கட்டிட மேஸ்திரி. இவருக்கும், பானுப்பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்தசில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் காக்கணம்பாளையம் பகுதிக்கு குடும்பம் நடத்த பானுப்பிரியாவை அழைத்து வந்தபோது துருவன் மற்றும் அவரது குடும்பத்தினர், பானுப்பிரியா வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும், ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை உள்ளதை மறைத்ததாகவும் கூறி அவரை திட்டி, வீட்டில் சேர்க்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக பானுப்பிரியா அந்தப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி, துருவன், அவரது தாய் வெண்ணிலா மற்றும் தம்பி பிரசாத் ஆகிய மூன்று பேரும் அவரது சமுதாயத்தை கூறி திட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக 3 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.