விபசாரம் செய்த பெண் உள்பட 3 பேருக்கு 6 மாதம் சிறை
விபசாரம் செய்த பெண் உள்பட 3 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்சி கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிலேதார்தெருவில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக பெறப்பட்ட புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து, பாலியல் தொழில் செய்ததாக தங்கமணி(வயது 39), லியாகத்அலி (53), சர்மிளாபானு (37) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி சுபாஷினி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயலெட்சுமி ஆஜரானார். இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த விபசார தடுப்பு பிரிவு போலீசாரை கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.