சூதாடிய பெண் உள்பட 3 பேர் சிக்கினர்


தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புளியம்பட்டியில் சூதாடிய பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியம்பட்டியில் உள்ள மணி என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். ்அங்கு திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரைச் சேர்ந்த பவுன்ராஜ் மனைவி அங்காளபரமேஸ்வரி (வயது 56), இவரது மகன் ஜெய்சிங் (28), திருப்பூர் மாவட்டம் அய்யன் நகரை சேர்ந்த பழனி மகன் மூக்கையா (66) ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த 3 பேரையும் புளியம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8,259 ரொக்கப்பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story