சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது


சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
x

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் கீழ்வேளூர் அருகே ஆந்தக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்தக்குடி ரோட்டு தெருவில் சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 41), பிரபு மனைவி நதியா (36) என்பதும், இவர்கள் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து இந்த பகுதியில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

3 பேர் கைது

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், நதியா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல புதுச்சேரி - விக்கினாபுரம் மேலத்தெரு பகுதியில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராமையன் (56) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.



Next Story